Saturday, May 19, 2012

சென்னை (வாலிப வயோதிக )+ யூத் +பரவச பதிவர் சந்திப்பு. காமெடி கலாட்டா!!!!!


சற்று என் மேல் கோபம் வருகிறது .

இன்று சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.
 
(சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ!!!!!)
 
ஒரு நல்ல வாய்பை மிஸ் பண்ணுகிறேன்  . நிகழ்ச்சி  கலக்க போவது  திண்ணம்.


பதிவர்கள்  சந்திப்புக்கு இந்த யானைக்குட்டி யின் இனிய வாழ்த்துக்கள் 

இதோ நீங்கள் யூத் பதிவர் என்றால்  கலந்து கொள்ள ஆறு  கட்டளை.
 
இன்றைக்கு முழுவதும் (சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ)
என்ற மந்திரத்தை சொல்லியபடி இருக்க வேண்டும்.

முடிந்தால் டி ஷர்ட் மற்றும்  கேப் (தொப்பி) போன்றவற்றை மறக்க வேண்டாம். (வரலாறு முக்கியம் ஆமாம்)

கண்டிப்பாக மொபைல் காமர அவசியம்.முடிந்தால் (வீடியோ காமர
என்றாலும் பரவாயில்லை).அப்பதான் பதிவுக்கு போட்டோ  தேத்த
முடியும் .

கண்ணில்  கண்டவர் பதிவர் என்றால் விட்டு விடாதீர்.
பாய்ந்து போய் ஒரு போட்டோ எடுத்து விடுங்கள்.(மவனே மாட்னிய!!!)


பதிவர்கள் எல்லாம்  நேரில் பார்த்தல் ரொம்பஅழகாக இருப்பார்கள் என்ற கோட்பாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள் (நான் என்னை சொன்னேன்.)


பதிவர் என்றாலே பாட்ஷா மாதிரி இன்னோரு பேரு இருக்கும்...அடி வாங்காம தப்பிக்க வீட்ல (எலி) வெளில (புலி) அம்புட்டுத்தான்.
அந்த புனை பேரை  (சத்தமில்லாமல்) கேட்டு அவர் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.
யாராவது பதுங்கி பதுங்கி
பேக்கு மாதிரி நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தால்
விட்டு விடாதிர். அவர்  தான் "சித்தர்" பதிவர் ஆக இருக்கலாம் .
முகத்தை காட்டாத "ஞானி" பதிவர் ஆக இருக்கலாம் .

சில தருணங்கள் ...சில வாய்ப்புகள் மறுபடியும் அப்படியே வாய்ப்பதில்லை.....எனவே சும்மா  கலக்குங்கள்.....

அன்புடனும் பாசமுடனும்
யானைக்குட்டி



Post Comment

Wednesday, May 16, 2012

என் கண்ணீர் அஞ்சலிகள்







 












என்ன அழகு , 

என்ன பணக்காரதனம் , 

நல்ல சாப்பாடு ,

கவலை இல்லா வாழ்வு 

பொறந்தா இப்படி

பொறக்கணும்..........

 

இப்படி தான் நானும் நினைத்தேன் நேற்றுவரை....

ஆனால் இன்று .......என்னமோ நெஞ்சை
கவ்வுகிறது. ........

 

என் சக உயிருக்காக இன்று என் கண்கள் கலங்கியது....  என் கண்ணீர் அஞ்சலிகள் 



நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள் உள்பட 21 பேருடன்  தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 21 பேரில் 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.




பலியானவர்களில்  குழந்தை  தருணி சச்தேவும் ஒருவர். 



Post Comment