Friday, November 25, 2011

வ்ய்! திஸ்! கொலைவெறி! கொலைவெறி! கொலைவெறி! டி ? விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..


இனியவர்களுக்கு ,
கடந்த  வாரம் முழுவதும்
நான்  ரசித்த சில விசய
ங்கள்  உங்கள் பார்வைக்கு ...

 *******************************************************************************************
என்ன கொடுமை சார் இது !!!!! 

அன்றும் இன்றும்   படிக்காதவன் 
பள்ளிக்கூடம்  கட்டுகிறான்  கட்டவும் ஆசை படுகிறான்.
அன்றும் இன்றும்  படித்தவன்  
அவனிடம் வேலை மட்டும் பார்க்கிறான் .
சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் .
************************************************************************ 
சும்மா !!தமாசு !!!


குட்டி பையா!
இன்று  மிகவும் அழகான நாள். வெளியில் சென்று வெளையாடு...தங்கம் .

*********************************************************************************

ஒரு அருமையான தகவல் ...உள்ளது

  


********************************************************************************
 பொது செய்தி »தமிழ்நாடு
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'





அட போங்கையா!!! அம்மா வாழ்க !!
காரணம்
எங்கள்க்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி இதனை அறிவிக்கவும் .....

ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!

***********************************************************************
 அன்றும் இன்றும் எனறும் பதிவு உலகில் 
நன்மை மட்டும் தரும் தூய பால் போல குணம் உள்ளவர் ...
அன்று பாலின் துயர் நீக்கினார் .
நெல்லை மக்களின் பயம் போக்கினார் .
அந்த பணிகளுடன் ...பதிவர் சந்திப்பு நடத்தி ..
இந்த யானைக்குட்டியை
பதிவு உலகில் அறிமுகம்  செய்த..
அவருக்கு என் நன்றிகள் ஆயிரம் ....
என்றும்  என்றும் உரியவை ......

***********************************************************************************************
என்னா ஐடியா !!!
******************************************************************************** 
எப்படி சார் இப்படி!!!!!
ரசிச்ச ஒரு விசயம்

******************************************************************************

இனிய பதிவர் நண்பர் கருவாலி ராமலிங்கம் அவர்களுக்கு

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ராமலிங்கம் சார்  படம் சும்மா தாமசு...சார் ....
*****************************************************************************
என்ன குறள் சார் இது! ரசித்து படிக்கலாம் வாங்க

********************************************************************************************************

சும்மா !!தமாசு !!! சில.......

----------------------------------

முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

தேங்க்ஸ்-Rajkumar சின்னசாமி
********************************************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!
 

தேங்க்ஸ்-சங்கர்  g 
*************************************************************************** 
 *****************************

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்  

 காமெடி கார்நெற்:-

சான்சு இல்லை! இப்படி காமெடி panna........பாருங்கள் ...
************************************************************************




************************************************************************

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 

Post Comment

Wednesday, November 2, 2011

கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு !


(அன்பு பாராட்டிய
பாராட்ட போகிற ...
உள்ளங்களுக்கு
என் இனிய நன்றிகள் ..
ஒரு ஆண் மகன்
பார்வை இது....
காலம் எப்படி ..
ஒருவனை மாற்றுகிறது ..
என்பதன் பார்வை ...
சற்று .........
இயல்பான வாழ்வியல்
கவிதை இது...
தவறுகள் இருந்தால் ,
கண்டால் ...
மன்னிக்கவும் .)


***************************************************


சந்தர்ப்ப  சூழ்நிலைகளில் ...
என் தங்கைகாக,
என் அக்காவுக்காக,
இவனிடம் எப்படி சொல்வது ..
தயங்கினாள் என் தாய்..
 

இலைமறை காயாக ஒரு
துண்டு சீட்டில் எழுதி ...
வாங்கி வாடா ! செல்லம் !
 
அதனை பிரித்து படித்த நொடியில்... 
 
 கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"
 
யார்கிட்ட என்ன சொல்ற....
போ !போயி நீய வாங்கிக்க .....
இந்த மாதறி அசிங்க பிடித்த  ..
வேலை எல்லாம் ..எங்கிட்ட சொன்ன !!
 
ஆம்பளை பையன் எங்கிட்ட
என்ன சொல்றது....
உனக்கு தெரிய வேண்டாம்...
போ ...போ ...
 



போனது  காலம்.....
இன்று அதே..    
சந்தர்ப்ப  சூழ்நிலை.
என் மனைவி  ஜஸ்ட் SMS  பண்ணுகிறாள் ..
ஆபீஸ் வேலை முடித்து ..
கொட்டும் !மழை பாராமல் ...
அண்ணாச்சி கடை சென்று ..
"அண்ணாச்சி ஒரு விஸ்பர் கொடுங்கள் .."
 

அப்போது ! ஏன் என் அம்மாவின் முகம்
ஞாபகம் வருகிறது.!!!!!






********************************
எண்ணம் : எழுத்து
வழக்கம் போல ...
கவிதை என்று நம்பி எழுதும்
(மன்னிக்கவும்) கிறுக்கும்
உங்கள் யானைக்குட்டி ...

Post Comment

Friday, October 28, 2011

என்னை நான் கொன்ற போது!! எழுதிய மரண (மன்னிக்கவும்) மனவாக்கு மூலம் ...


-நீ-
நீயாக இரு .
உன்னுள்
தீயாக இரு .
ஆனாலும்
உனக்கு நீ
தாயாக இரு. 
எதிலும் முதலாக இரு 

முடியாவிட்டாலும் ,
அதன் .....
முடிவாக இரு. .

நோக்கம் தான் ஊக்கம் .
ஊக்கம் தான் ஆக்கம்.
ஓடும்  ஆறாக இரு .
தேங்கும் சேறாக த்திரு.
ததும்பும்   புன்னகையாய் இரு .
மிகவும் தன்மையாய் இரு.
தயக்கத்தை தாண்டி விடு.

உன்னுள் உன்னை தூண்டி விடு.
கற்பனை மூலம் காணும் கனவை விட்டு விடு .
வாழ்வது என்பதுதான் கடவுள் அதை உணர்ந்திடு.  
மூச்சு  உள்ளவரை முயற்சி  தான்  என்றிரு.

போன  காலம் ..போகட்டும்  பொறுத்திடு ..
வாழும் காலம்    வசந்தமாக்கி  வாழ்த்திடு .
 
கவிதை என்று
நம்பி எழுதியது
 -உங்கள்  நண்பன் -
-யானை குட்டி -

Post Comment

Thursday, October 20, 2011

பதிவு உலகின் மிக மிக மிக சிறிய ...."டெரர் '' கவிதை !



"பதிவு உலகின்" மிக! மிக! மிக! சிறிய !டெரர் !! கவிதை.
                                                                    

                                                                                                         ஆ!








டெரர்..... விளக்கம்
இந்த சாதனை --)
இதற்கு முன்னால் நிகழ்த்த பட்டு இருந்தால் ..
அது ...கண்டிப்பாக -அ -என்று தான் இருந்து இருக்கும் .

(அப்பாடா! தப்பித்து விட்டோம் !)

ஆக தாங்கள்..
இதற்கான
"சன்மானங்களை"....
உடன் கொடுத்து ..
இந்த தீபாவளியை கொண்டாட !
உதவுமாறு ...
கேட்டு கொள்கிறான் ...
டெரர் கவிஜன்  -
யானை குட்டி . 

--------------------------

இனிய நண்பர்களுக்கு ,

மிக! மிக! மிக! சிறிய பதிவு ..... என்ற போன பதிவு ...குறித்து ..வழக்கம் போல ..

நான் யாருக்கும்  மெயில் அனுப்பவில்லை ...

இருந்தாலும் பதிவு கண்டு உடன் வாழ்த்திய ..

இந்த உள்ளங்கள்க்கு நன்றிகள் ஆயிரம் .....

கணேஷ்

சி.பி.செந்தில்குமார்
விக்கியுலகம்
MANO நாஞ்சில் மனோ
K.s.s.Rajh
இராஜராஜேஸ்வரி


----------------------------------------------------------------------------



 


Post Comment

Monday, October 17, 2011

மிக! மிக! மிக! சிறிய பதிவு .....









இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல!
 
தொல்வியும்  அதன் துன்பமும்  கூட!

Post Comment

Friday, October 14, 2011

தமிழ் மணம்- வாங்க!!!பழகலாம் (மன்னிக்கவும்) தகுதி இல்லை ! வாங்க விலகலாம்!!!!


பதிவு உலகில்  "நாங்கள்"
மிகவும் மென்மையானவர்கள் !
 
எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
 மட்டும்.  எப்போதும் காணலாம் ....
 
எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின்  நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது  மற்றும் எங்களின்
 வழி மற்றும் வலி.!
 
இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
 
நாங்கள் அன்பின் ஏசு  தான்!  அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
 
எதிரி என்றாலும் எங்களை.... 
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
 
வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!!  இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு  சந்திப்போம்! சக மனிதனாக!!


அன்புடன்
யானைக்குட்டி
 




கண்டனம் !!!!!

என் குழந்தை இட்ட,
முத்தத்தின்,,,,,,,,,,,
ஈரத்தை .....நான்!
முழுமையாக ....
உணர்வதற்குள் ,,,,
களவாடியது காற்று
.

-யானை குட்டி -

-------------------------------------------------------------------------
 நான் ஒரு கமல் ரசிகன் என்பதால் ரஜினி  ரொம்ப பிடிக்கும் .
ரஜினி  பிடிக்க பல காரணம் உண்டு .
அதில் இதுவும் உண்டு .
ரஜினி சொல்லும் கவலை போக்கும் வழி.
மக்கள் கூடும் இடம் ...மகாலட்சுமி வாசம் செய்வாள் ...என்ற கருத்து.
தான் தண்ணி  அடித்த கதை ....தான் சொத்து வாங்கிய  கதை ....
அசத்தல் வீடியோ ......


------------------------------------
இந்த வீடியோ பார்க்க ஆடியோ தேவை  இல்லை! ஆர்வம் மட்டும்  போதும் .



--------------------------------------------------


என் இனிய அன்பு உள்ளங்கள்  அனைவர்க்கும் .
ஒரு அன்பின் போட்டி .....
இந்த படம் என்னமோ !சொல்கிறது ..
அது நான்கு வரி கவிதையாக இருக்கலாம் .
அல்லது நான்கு வரி வார்த்தையாக இருக்கலாம் .
என்னமோ !எனக்கு பிடிபடவில்லை ?
நீங்கள் சொல்லுங்கள் ..
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஒரு இனிய எளிய அன்பு பரிசு
உண்டு ,
"மெகா அன்பு பரிசு " நச்சுனு.. சொல்லும் ...
மூவர்க்கு.. 
வரும் ---25 /11 /2011 --க்குள் ..நச்சுனு.. சொல்லுங்கள் ...

Post Comment

Wednesday, October 12, 2011

ஹலோ! சார் /மேடம் ! முதலிரவா? முதலில் நன்றாக தூங்குங்கள் ...!


திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை படிக்கலாம். என்ன ஒரே சஸ்பென்சாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம் விசயம் அத்தனை முக்கியமானது.
திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை.

அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும். தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது. இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.
முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.
 
முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.

சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.



---------------------------------------------------------------------------------------------------------
இன்ஜினியராக உள்ள இரண்டு மகன்களையும் படிக்க வைத்ததும்,
என் கிச்சன் தான்
"குக்கரி ஆசிரியர்' சூர்யாபிறந்து  வளர்ந்ததெல்லாம், பெங்களூரு தான்.
என் கணவர் கணேசின் ஊர் திண்டுக்கல். திருமணம் முடிந்த பின், மைசூருக்கு குடிபெயர்ந்தோம்.என் அம்மா என்னையும், சகோதரிகள் மூவரையும் பொழுது போக்காக, சமையல் கற்றுக் கொள்ள அனுப்பினார். அது தான், என் வாழ்க்கைக்கு பெரும் ஆதரவாக உள்ளது. என் இரு பிள்ளைகளும் பிறந்து, அவர்கள் பள்ளி சென்ற பின், கேட்டரிங் கிளாஸ், பேக்கிங் கிளாஸ் என்று கற்றுக் கொண்டேன்.ஒரு முறை, பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணிற்கு சமையல் கற்றுக் கொடுத்தேன். அவரின் கைப்பக்குவத்தை ரசித்த அனைவருக்கும், அவர் என்னை அறிமுகப்படுத்த, நிறைய பேர் வந்துவிட்டனர் சமையல் கற்றுக் கொள்ள.கூட்டம் பெருகியதால், அதை ஒருங்கிணைக்க ஒழுங்குமுறை தேவைப்பட்டது. கைடு தயாரித்து, நோட்ஸ் கொடுத்து, பல பேட்ச்களாக வகுப்புகளைப் பிரித்து, முறையான, "குக்கிங் பள்ளி' யானது என் சமையல் அறை. கற்றுக் கொள்பவர்களின் சந்தேகங்களை பொறுமையாக களைவதால், மாணவர்களிடம், "நல்ல ஆசிரியர்' பெயர் வாங்கிக் கொடுத்தது.கணவரின் பிசினஸ் மிகவும் டல்லாகி சிரமப்பட்டபோது, குடும்பச் செலவுகளை தாங்கியது, பொழுபோக்கிற்காக நான் கற்றுக் கொண்ட சமையல் கலை வருமானம் தான். இப்ப, இன்ஜினியராக உள்ள இரண்டு மகன்களையும் படிக்க வைத்ததும், என் கிச்சன் தான். என்ன தெரியும் எனக்கு என நொந்து கொள்ளாமல், தெரிந்த சமையலைக் கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், சாதிக்கலாம்!
..............................................................................................................................................
ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர்.
புதுடில்லி :""நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது.
..........................................................................................................................................
வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.


ஸ்கின் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். கிராபின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போனின் பேனல் வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.
இந்த மொபைலின் எல்சிடி திரையும் வளைந்து நெளியும் என்பது கூடுதல் சிறப்பு.
இதில் 8 மெகா பிக்ஸல் வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வசதி கொண்டது.
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
  "தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும்."

ஒரு  விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.

"நான் இயக்கிய 'அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.
                                       அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை.

தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

இதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக 'அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார். "தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்,'' என்று கூறிவிட்டு சென்றார்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி, 'அழகி' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும்.

தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும்.
-----------------------------------------------------------------------------------------

Thanks.Thatstamil/Dinamalar 


                                                        பாச பார்வைகள் !!!!



Post Comment

Saturday, September 24, 2011

கோவிந்தா !கோவிந்தா! சென்னையில புது பொண்ணு !!!





வழக்கம் போல ! நான் சுய நினவு இல்லாமல் எழுதிய பதிவு .
என்னை அடிக்கவோ !உதைக்கவோ! விரும்பினால் ...
கமெண்ட் போடவும் ....(நாங்க எல்லாம் !அட்ரஸ் குடுத்தால் போதும்
தேடிவந்து !உதை வாங்குவோம் !! ஹி!ஹி!ஹி!ஹி!)
 

 ----------------------------------------------------------------


கவிதை 



ஒரு அரசியல்வாதி  கல்லறை  முன்பு !!!
-------------------------------------------------


தயவு  செய்து !!!
கை!தட்டி!!விடாதிர்கள் !!!
இவன் எழுந்து விட போகிறான்!!!
 
-யாரோ சொன்ன கவிதை !!!-



----------------------------------------------------------------
கவிதை விளக்கம் :
------------------------------------------------
 சென்னை: சட்டவிரோத மணல் கொள்ளை மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரவாக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் ரூ. 238 கோடி வரை அவர் சம்பாதித்து வைத்திருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளதாம்.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட அதன் சுற்றுச்சூழலே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் மணலை சட்டவிரோதமாக அள்ளி பணம் பார்த்துள்ளாராம் கேசிபி.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட 350 ஏக்கர் பரப்பளவில் மணலை வாரி எடுத்துள்ளனர் கேசிபியும் அவரது கூட்டாளிகளும். அரசு கணக்குப்படி அவர் ரூ. 49 கோடி அளவிலான மணலைத்தான் அள்ளியுள்ளார். ஆனால் வெளிச் சந்தையில் விற்ற வகையில் மட்டும் இந்த ரூ. 238 கோடியை அவர் பார்த்துள்ளார்.




 

Post Comment

Wednesday, September 21, 2011

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!

பெருமக்களே, மாணவர்களே, இளைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
 
எண்ணங்கள் செயலாகின்றன.
ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.
ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்

செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். 
இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் 
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும்

மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த
வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.


நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு

இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்

உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.



நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்

பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன்,

வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்
வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம்

இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்
இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என்
நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.

1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது

வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது
எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய

உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு
காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்? 



கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.


எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை

பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.
அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்
வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை
உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.


எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.

எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய

சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.



பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா

60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,

இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி


 

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது

கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........
மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன

வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.

மனத்தூய்மை


எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.


மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி



புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

 
நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள்

இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,
நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

நீங்கள் என்னை
www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.


Thanks-Thatstamil



Post Comment